டிரெண்டிங்
சரத்யாதவ் ஒருபோதும் லாலுவை ஆதரிக்கமாட்டார்: ஐக்கிய ஜனதா தளம் நம்பிக்கை
சரத்யாதவ் ஒருபோதும் லாலுவை ஆதரிக்கமாட்டார்: ஐக்கிய ஜனதா தளம் நம்பிக்கை
ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவை ஒருபோதும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் ஆதரிக்க மாட்டார் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் சுனில் குமார் சிங், ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் பேசி வரும் லாலு பிரசாத் யாதவ், தேவையில்லாமல் சரத் யாதவ் பெயரைப் பயன்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக வியாழன் அன்று செய்தியாளர்களிடம் பேசிய லாலுபிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் ஆகஸ்டு 8 ஆம் நாள் பாட்னா வரும்போது அவரை சந்தித்துப் பேச உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். அவருடன் இணைந்து பாஜகவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அப்போது விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.