“ஜடேஜாவுக்கு பதில் அக்ஸர் பட்டேலா?” வாயை விட்டு வாங்கி கட்டிக்கொண்ட சஞ்சய் மஞ்ரேக்கர் !

“ஜடேஜாவுக்கு பதில் அக்ஸர் பட்டேலா?” வாயை விட்டு வாங்கி கட்டிக்கொண்ட சஞ்சய் மஞ்ரேக்கர் !
“ஜடேஜாவுக்கு பதில் அக்ஸர் பட்டேலா?” வாயை விட்டு வாங்கி கட்டிக்கொண்ட சஞ்சய் மஞ்ரேக்கர் !

ரவீந்திர ஜடேஜா குறித்து ட்விட்டரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் வெளியிட்ட விமர்சனம் குறித்து சமூக வலைத்தள வாசிகள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

அண்மையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அணியில் ஜடேஜாவின் பெயர் இருந்தது. இதனையடுத்து, ஜடேஜாவின் தேர்வை விமர்சித்து நிதிஷ் குமார் என்பவர் ட்வீட் வெளியிட்டார். இதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டு மஞ்ரேக்கர் ரீட்வீட் செய்தார்.

இப்போது கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த நிலையில், மஞ்ரேக்காரின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு பலர் கலாய்த்து வருகின்றனர். நிதிஷ் குமார் என்பவர் வெளியிட்ட ட்விட்டர் “ரவீந்திர ஜடேஜா டி20 அணிக்கு சரிப்பட்டு வரமாட்டார். அவருக்குப் பதில் அக்ஸர் படேலை தேர்வு செய்திருக்கலாம்” எனப் பதிவிட்டார். இதனை மஞ்ரேக்கர், முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் என குறிப்பிட்டு ரீட்வீட் செய்தார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது அதிகளவில் பகிரப்பட்டு, மஞ்ரேக்கரை பலர் விமர்சித்து வருகின்றனர்.

குறித்து மஞ்ரேக்கர் விமர்சனம் செய்வது இது முதல் முறையல்ல. பல முறை ஜடேஜாவை விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். உலகக் கோப்பை தொடரின் போது, தெருவில் ஆடும் கிரிக்கெட் வீரர் என்று ஜடேஜாவை மஞ்ரேக்கர் விமர்சிக்க, அதற்கு தனது பேட்டால் பதில் கூறியிருந்தார் ஜடேஜா. இப்போதும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய அதிரடியால் பதிலளித்து இருக்கிறார் ஜடேஜா.

இதனையடுத்து சிஎஸ்கே வெற்றி குறித்து ட்வீட் செய்துள்ள அவர் "சிஎஸ்கே வெற்றி சிறப்பானது. ருதுராஜ் அமைத்துக் கொடுத்தார் ஜடேஜா தனது அபாரமான ஆட்டத்தால் முடித்து வைத்தார்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com