\
ராசிபுரம் : கிணற்றில் தவறி விழுந்து 20 மணிநேரம் உயிருக்கு போராடிய நாய் பத்திரமாக மீட்பு

ராசிபுரம் : கிணற்றில் தவறி விழுந்து 20 மணிநேரம் உயிருக்கு போராடிய நாய் பத்திரமாக மீட்பு

ராசிபுரம் : கிணற்றில் தவறி விழுந்து 20 மணிநேரம் உயிருக்கு போராடிய நாய் பத்திரமாக மீட்பு
Published on

ராசிபுரம் அருகே தெரியாமல் தவறி கிணற்றில் விழுந்து சுமார் 20 மணிநேரம் உயிருக்கு போராடிய நாயை தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தன்னுடைய வீட்டில் பைரவா என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இதனிடையே பைரவா நாய் திடீரென காணமால் போனது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் நாயை ரவி தேடியுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அவர் வீட்டிற்கு அருகிலுள்ள வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான கிணற்றிலிருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி நாயை எவ்வித காயமும் இல்லால் மீட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com