நடிகர் கருணாஸை கிண்டல் செய்த எஸ்.வி.சேகர்

நடிகர் கருணாஸை கிண்டல் செய்த எஸ்.வி.சேகர்

நடிகர் கருணாஸை கிண்டல் செய்த எஸ்.வி.சேகர்
Published on

நடிகர் கருணாஸை தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர் கிண்டலடித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஷால் அலுவலகத்தில் நேற்று வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பின் அரசியல் அழுத்தம் இருப்பதாக சில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது  குறித்து நடிகர் கருணாஸ், “விஷாலை மிரட்ட சோதனை நடத்துவதா?”என்று கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் எஸ்.வி.சேகர், “அதெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி. எந்த எம்.எல்.ஏ. ஜனவரிக்கு பிறகு எவ்வளவு சொத்து சேத்திருக்காங்கன்னு கேக்க போனாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க” என்று கிண்டலடித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com