
மதுரையில் குருதி நன்கொடை விழிப்புணர்வுக்காக நடைபெற்ற மாரத்தான் ஒட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரத்தான் போட்டியில் பங்கேற்போர் எந்தெந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக மருத்துவர் வினோத்துடன் புதிய தலைமுறை செய்தியாளர் நடத்திய
கலந்துரையாடலைப் பார்க்கலாம்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "மாரத்தான் போட்டியில் பங்கேற்க முறையான பயிற்சி தேவை நேரடியாக மாரத்தான் போட்டியில் பங்கேற்பது தவறான செயல். உடல் தகுதி இருந்தால் அனைத்து வயதினரும் மாரத்தானில்
பங்கேற்கலாம்.
இதய நோய் போன்ற பிரச்னைகள் உள்ளோர் மாரத்தானில் பங்கேற்காமல் இருப்பது நலம். மாரடைப்பு இப்போது அனைத்து
வயதினருக்கும் வருகிறது. மாரத்தான் போட்டியால்தான்
மாரடைப்பு வந்ததா எனக்கூற முடியாது" என்று கூறினார்.