"வாக்கு இயந்திரம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!" - தேர்தல் ஆணையம்

"வாக்கு இயந்திரம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!" - தேர்தல் ஆணையம்

"வாக்கு இயந்திரம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!" - தேர்தல் ஆணையம்
Published on

வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடு செய்யலாம் என வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது

இது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன் கூறியதாக வெளியான வதந்தி தற்போது மீண்டும் சமூக தளங்களில் உலா வந்து கொண்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த தவறான தகவல் குறித்து டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஏற்கெனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் திட்டவட்டமாக மறுத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்ற செய்தியை தற்போது பரப்பியவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com