சிறையில் பார்வையாளர்களை சந்திப்பதில் சசிகலாவுக்கு சலுகை அளிக்கப்பட்டதா?

சிறையில் பார்வையாளர்களை சந்திப்பதில் சசிகலாவுக்கு சலுகை அளிக்கப்பட்டதா?

சிறையில் பார்வையாளர்களை சந்திப்பதில் சசிகலாவுக்கு சலுகை அளிக்கப்பட்டதா?
Published on

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு பார்வையாளர்களை சந்திப்பதில் கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுவதாக மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா சிறையில் மற்ற கைதிகளை விட கூடுதலாக சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. சசிகலாவுக்கு 5 அறைகள் இருப்பதும், தனியே சமையலறை இருப்பதும் இதற்காக அவர் சிறைத் துறை ஏடிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ.2 கோடி லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா புகார் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சசிகலா பிரமுகர்களை சந்திப்பதில் கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுவதாக மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் யார் யாரை எந்த தேதியில் எவ்வளவு நேரம் சந்தித்திருக்கிறார்கள் என்ற தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று ஆர்.டி.ஐ மூலம் கேட்டு பெற்றது. இதற்கு சிறைத்துறை அதிகாரிகள் சில தகவல்களை கொடுத்துள்ளனர்.  

அதில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி அதாவது ஆர்கே நகர் தேர்தல் முடிவு வெளியாகி 4 நாட்களில் டிடிவி தினகரன், சிறையில் சசிகலாவை சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது. இச்சந்திப்பு சுமார் 45 நிமிடம் நீடித்ததாகவும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவண நகல் கூறுகிறது. ஆனால் இச்சந்திப்பு 3 மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தரப்பில் கூறப்படுகிறது.

தண்டனை கைதிகளை 15 நாட்களுக்கு ஒரு முறையே சந்திக்க முடியும் என்பதே விதி. இந்த விதியை மீறி சசிகலாவை சந்திக்க பிரமுகர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக ஆர்.டி.ஐ தகவலின் படி செய்தி வெளியாகியுள்ளது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com