கேரளாவில் வேரூன்றும் ஆர்.எஸ்.எஸ்: அதிகரிக்கும் உறுப்பினர் சேர்க்கை

கேரளாவில் வேரூன்றும் ஆர்.எஸ்.எஸ்: அதிகரிக்கும் உறுப்பினர் சேர்க்கை
கேரளாவில் வேரூன்றும் ஆர்.எஸ்.எஸ்: அதிகரிக்கும் உறுப்பினர் சேர்க்கை

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் 7000 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கை கடந்த ஆண்டில் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகி கோபாலன்குட்டி கூறுகையில், “கேராளவில் துடிப்புடன் இயங்கக் கூடிய 1.75 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். வாரம்தோறும் அமைப்பின் நடவடிக்கையில் தவறாமல் கலந்து கொள்கிறார்கள். 6,845 வேதப்பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ் நடத்துகிறது. இதில் 4,105 தினசரி வகுப்புகளும், 2,740 வார வகுப்புகள் நடக்கிறது. இந்தப்பள்ளிகளில் தினசரி 84,000 பேர் கலந்து கொள்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் 4 லட்சம் உறுப்பினர்களும், 2 லட்சம் தொண்டர்களும் உள்ளனர். கடந்த 4-5 வருடங்களில் 5-8 சதவீதம் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் இந்து ராஜ்ஜியம் அமைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டுள்ளது” என்றார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி இன்னும் முக்கிய பிரதான கட்சியாக வளரவில்லை. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அதிகம் உள்ள மாநிலம் என்பதும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு வரலாற்று ரீதியான பலம் உள்ளது என்பதும் காரணமாக கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களிடையே தொடர்ந்து மோதலும் வன்முறையும் நிகழ்ந்து வருகிறது. பாரதிய ஜனதாவும் பிரதான கட்சியாக மாற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் மக்கள் பாதுகாப்பு பேரணி என்ற பெயரில் மிகப்பெரிய பேரணியை ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்டது. அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com