"கைப்பற்றப்பட்டது வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பணம்தான்"- வருமான வரித்துறை

"கைப்பற்றப்பட்டது வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பணம்தான்"- வருமான வரித்துறை
"கைப்பற்றப்பட்டது வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பணம்தான்"- வருமான வரித்துறை

ஆண்டிபட்டியில் அமமுக நிர்வாகிக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்தாக சோதனை நடைபெற்ற வளாகத்தில் இருந்த ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:- “ தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக நிர்வாகிக்கு சொந்தமான வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த சோதனை இன்று காலை 5.30 மணி வரை நீடித்தது. வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற இடத்தின் கீழ்தளத்தின் தான் அமமுக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

வருமான வரித்துறையினரின் சோதனையில் ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் அனைத்தும் 94 பாக்கெட்டுகளில், வார்டு எண் மற்றும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களுடன் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் என்ற வீதத்தில் அதில் எழுதப்பட்டிருந்தது. சோதனை நடைபெற்றபோது அங்கிருந்த ஒருவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவர் கூறும்போது, ஆண்டிபட்டி பஞ்சாயத்து யூனியன் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் வகையில் 2 கோடி ரூபாய் பணம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் அங்கு செல்ல முயன்றபோது அமமுக நிர்வாகிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது ஒருசில கட்டு பணத்துடன் அங்கிருந்து ஒருவர் தப்பிவிட்டார். மீதமுள்ள 1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்து ஒரு தபால் வாக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட தபால் வாக்குச்சீட்டில் அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டு இருந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com