\
கட்சிப் பொறுப்பில் இருந்து ஆர்.பி உதயகுமார் விடுவிப்பு

கட்சிப் பொறுப்பில் இருந்து ஆர்.பி உதயகுமார் விடுவிப்பு

கட்சிப் பொறுப்பில் இருந்து ஆர்.பி உதயகுமார் விடுவிப்பு
Published on

ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விடுவிக்கப்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விடுவிக்கப்பட்டு, ஜெயலலிதா பேரவையின் புதிய செயலாளராக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா விடுவிக்கப்பட்டு, உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அப்பொறுப்பில் நியமிக்கப்படுவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார். இதே போல் தஞ்சாவூர் மாவட்டக் கழக செயலாளர், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கழகப் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலைப் பெற்றே எடுக்கப்பட்டுள்ளதாகவும் தினகரன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com