மாறி மாறி செயல்படுகிறார் ஆர்.பி.உதயகுமார்: தினகரன் அணி குற்றச்சாட்டு
கட்சியில் குழப்பம் விளைவிக்கவே டிடிவி தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவித்திருப்பதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ள நிலையில்- சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றும், டிடிவி தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் என்றும் தேர்தல் ஆணையத்தில் ஆர்.பி உதயகுமார் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை டிடிவி தினகரன் அணி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் ஆர்.பி உதயகுமார் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சசிகலாவும், தினகரனும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஒட்டுமொத்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆதரவுடனே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்திருந்தார்.