\
“இன்னும் 10 ஆண்டுகளுக்கு பழனிசாமிதான் முதல்வர் என ஜோதிடர் சொல்லிவிட்டார்” -ஆர்பி உதயகுமார்

“இன்னும் 10 ஆண்டுகளுக்கு பழனிசாமிதான் முதல்வர் என ஜோதிடர் சொல்லிவிட்டார்” -ஆர்பி உதயகுமார்

“இன்னும் 10 ஆண்டுகளுக்கு பழனிசாமிதான் முதல்வர் என ஜோதிடர் சொல்லிவிட்டார்” -ஆர்பி உதயகுமார்
Published on

இன்னும் 10 ஆண்டுகளுக்கு முதல்வர் பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நகற்ற முடியாது என ஜோதிடர்கள் கூறியுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.

திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கிராம மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். அப்போது மக்கள் மத்தியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது...

கொரோனோ காலத்தில் மக்களை சந்திக்காதவர் எதிர்க்கட்சித் தலைவர். சொன்னதை செய்த தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிந்தவுடன் அனைவரது வீட்டிலும் காலிங் பெல்லை தட்டி வாஷிங்மெஷின் வழங்கப்படும்.

கலைஞர் கஞ்சத்தனம் கொண்டவர். திமுக ஆட்சிக் காலத்தில் முதியோர் உதவித்தொகை 500 ரூபாயாக 12 லட்சம் பேருக்கு வழங்கினார். தற்போது அதிமுக ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் 10 ஆண்டுகளுக்கு முதல்வர் பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நகற்ற முடியாது என ஜாதக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக கிடைத்ததை ஆல் பாஸ் மாணவர்கள் பாக்கியமாக கருதுகின்றனர். மக்களின் உணர்வுகளை உணர்ந்து எடப்பாடி பழனிசாமி திட்டங்களை செயல்படுத்துகிறார்.”என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com