CSK Vs. RCB: இழப்பதற்கு எதுவும் இல்லை.. ஆறுதல் வெற்றி பெறுமா சி.எஸ்.கே.?

CSK Vs. RCB: இழப்பதற்கு எதுவும் இல்லை.. ஆறுதல் வெற்றி பெறுமா சி.எஸ்.கே.?
CSK Vs. RCB: இழப்பதற்கு எதுவும் இல்லை.. ஆறுதல் வெற்றி பெறுமா சி.எஸ்.கே.?
புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் என்ற அவலநிலையை சி.எஸ்.கே. தகர்த்தெறியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
 
சி.எஸ்.கே. அணி இதுவரை 11 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டும் பதிவு செய்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. பிளே-ஆஃப் வாய்ப்பு கைமீறி சென்றுவிட்டதால், எஞ்சிய ஆட்டங்களில் இளம் வீரா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
 
 
ஆர்.சி.பி. அணி 10 ஆட்டங்களில் 7 வெற்றிகளை பதிவு செய்து வலுவான நிலையில் உள்ளது. பெங்களூரை பொருத்தவரை இந்த சீசனில் தன்னை படிப்படியாக மேம்படுத்திக் கொண்டு வந்துள்ளது. பேட்டிங், பௌலிங்கில் சிறப்பான நிலையில் இருக்கும் அந்த அணி, பிளே-ஆஃபுக்கு செல்லும் முதல் இரு அணிகளில் ஒன்றாக உருவெடுக்கும் வகையில் ரன் ரேட்டை அதிகரிக்க முயற்சிக்கும். கடைசி 2 ஆட்டங்களில் வலுவான வெற்றியையும் அந்த அணி பதிவு செய்துள்ளது.
சென்னை உத்தேச அணி: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, ஜெகதீசன், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், ஷார்துல் தாகூர் / கே.எம். ஆசிப், இம்ரான் தாஹிர், ஜோஷ் ஹேசில்வுட் / லுங்கி என்ஜிடி / மிட்செல் சாண்ட்னர்
 
பெங்களூரு உத்தேச அணி: ஆரோன் பிஞ்ச், தேவதூத் பாடிக்கல், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ்), குர்கீரத் சிங் மான், கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், இசுரு உதனா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை ஆடிய 26 ஆட்டங்களில், சென்னை 16 வெற்றிகளையும், பெங்களூரு 9 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com