டிரெண்டிங்
‘ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி; விரைவில் சந்திப்போம்..’ - விராட் கோலி.!
‘ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி; விரைவில் சந்திப்போம்..’ - விராட் கோலி.!
நேற்றிரவு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதால் கோலி தலைமையிலான பெங்களூர் அணி தொடரிலிருந்து வெளியேற நேரிட்டது.
இந்நிலையில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் விராத் கோலி தனது அணியினருடன் குழு புகைப்படம் ஒன்றை எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில் கோலி கூறுகையில், ‘’ஏற்றங்கள் இறக்கங்கள் ஊடாக ஒன்று கூடியுள்ளோம். இது ஒரு யூனிட்டாக எங்களுக்கு ஒரு சிறந்த பயணம். ஆமாம் வெற்றி எங்கள் வழியில் செல்லவில்லை, ஆனால் முழு டீமும் பெருமை கொள்கிறது. ஆதரவளித்த எங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு எங்களை பலப்படுத்துகிறது. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்போம்''.