டிரெண்டிங்
ஆர்.கே.நகரில் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்: சுயேட்சைகள் சலசலப்பு
ஆர்.கே.நகரில் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்: சுயேட்சைகள் சலசலப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பாரதிய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். தண்டையார்பேட்டையில் தேர்தல் அலுவலரிடம் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சிறிது சலசலப்பு ஏற்பட்டது. மனு தாக்கல் செய்ய வரிசையில் நிற்கும்போது முக்கிய கட்சியைச் சேர்ந்த நபர் என்பதால் பாஜக வேட்பாளர் மட்டும் காத்திருக்காமல் நேரடியாக சென்றதாக சுயேட்சை வேட்பாளர்கள் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி தினமான இன்று 40க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர்.