\
ஆர்.கே.நகர் தேர்தல்: அதிமுகவில் 20 பேர் விருப்ப மனு அளிப்பு

ஆர்.கே.நகர் தேர்தல்: அதிமுகவில் 20 பேர் விருப்ப மனு அளிப்பு

ஆர்.கே.நகர் தேர்தல்: அதிமுகவில் 20 பேர் விருப்ப மனு அளிப்பு
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட மதுசூதனன், பாலகங்கா, கோகுல இந்திரா உள்பட 20 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த ஏப்.14 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரின் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும் தொடங்கிவிட்டது. திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார்.

அதிமுவில் ஆட்சிமன்றக் குழு மாற்றி அமைக்கப்பட்டு ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் புதிய ஆட்சிமன்றக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்பமனு அளித்தார். அவரை தொடர்ந்து பாலகங்கா, கோகுல இந்திரா உள்பட 20 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். கடந்த முறை ஆர்.கே.நகருக்கு தேர்தல் அறிவித்தபோது ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக களமிறங்கினார். தற்போது மதுசூதனனுக்கு கட்சிக்குள்ளேயே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com