ஆர்.கே.நகரில் ஆளும்கட்சி பின்னடைவை சந்திக்கும்: முன்னாள் அமைச்சர்

ஆர்.கே.நகரில் ஆளும்கட்சி பின்னடைவை சந்திக்கும்: முன்னாள் அமைச்சர்

ஆர்.கே.நகரில் ஆளும்கட்சி பின்னடைவை சந்திக்கும்: முன்னாள் அமைச்சர்
Published on

தமிழகத்தில் 1996ஆம் ஆண்டிற்கு பிறகு எதிர்க்கட்சி வெற்றிபெறும் இடைத்தேர்தலாக ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு அமையும் என திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சென்னை ஆர்.கே.நகருக்கு 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனுத்தாக்கல் பணிகள் நிறைவடைந்து வாக்காளர் இறுதிபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உள்பட்ட வஉசி நகரில் அவரை ஆதரித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக வேட்பாளர் மருதுகணேஷ், உதவிகளை செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். தமிழகத்தில் 1996ஆம் ஆண்டிற்கு பிறகு எதிர்க்கட்சி வெற்றிபெறும் இடைத்தேர்தலாக ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு அமையும்  அவர் தெரிவித்தார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com