டிரெண்டிங்
தேர்தலைப் போல வழக்கிலும் வெற்றி பெறுவேன்: டிடிவி தினகரன்
தேர்தலைப் போல வழக்கிலும் வெற்றி பெறுவேன்: டிடிவி தினகரன்
தேர்தலைப் போன்று வழக்குகளிலும் வெற்றி பெறுவேன் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சொந்த ஊரான மன்னார்குடிக்கு குடும்பத்தினருடன் சென்ற டிடிவி தினகரன், அங்குள்ள தங்கள் குலதெய்வம் கோயிலான தட்டான்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் விருப்பப்படி ஜெயலலிதா ஆட்சியை அமைக்கப்போவதாக தெரிவித்தார். சட்டப்பேரவையில் தான் என்னப் பேசப்போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறினார். அப்போது ரஜினியின் ஆன்மிக அரசியல் தொடர்பான அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தினகரன் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.