ஆர்.கே.நகர் அதிமுகவின் எஃகு கோட்டை : அமைச்சர் செங்கோட்டையன்
இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என்றும், இத்தொகுதிக்கு ஜெயலலிதா அறிவித்திருந்த மற்ற திட்டங்களை மதுசூதனன் நிறைவேற்றுவார் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.சி.சம்பத் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தண்டையார்பேட்டை சுந்தரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்களை பிரச்சாரத்தின்போது அமைச்சர்கள் எடுத்துகூறினர். மேலும் ஆர்கே நகர் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என்றும், தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதே போல் ஜெயலலிதா அறிவித்திருந்த மற்ற திட்டங்களை மதுசூதனன் நிறைவேற்றுவார் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.