\
ஆர்.கே.நகர்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற பாஜக!

ஆர்.கே.நகர்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற பாஜக!

ஆர்.கே.நகர்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற பாஜக!
Published on: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவில் பாஜக, நோட்டாவை விட பின் தங்கியுள்ளது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவிக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழகர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் 77.5 சதவித வாக்குகள் பதிவாகின.

 தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் சுற்று முடிவில் 5,339 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார்.

இதில் தேசிய கட்சியான பாஜக நோட்டாவை விட குறைவான வாக்குகளே பெற்றுள்ளது. ஆர்.கே.நகரில் நோட்டாவுக்கு இதுவரை 122 வாக்குகள் பதிவாகியுள்ளன. பாஜக வேட்பாளரான கரு.நாகராஜன் 66 வாக்குகள் மட்டுமே பெற்று நோட்டாவுக்கு அடுத்த நிலையில் உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com