\
தோல்வியைக் கடந்து 2ஜி வெற்றியை கொண்டாடுங்கள்: ஸ்டாலின் கடிதம்

தோல்வியைக் கடந்து 2ஜி வெற்றியை கொண்டாடுங்கள்: ஸ்டாலின் கடிதம்

தோல்வியைக் கடந்து 2ஜி வெற்றியை கொண்டாடுங்கள்: ஸ்டாலின் கடிதம்
Published on: 

இடைத்தேர்தல் எனும் தற்காலிகத் தோல்வியை கடந்து 2 ஜி வழக்கில் கிடைத்த நிரந்தர வெற்றியை கொண்டாடுமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் எனும் ஆற்றின் கரையோரம் நிற்கும் ஜனநாயகக் குழந்தையை பணநாயக முதலை விழுங்கும் போது எல்லாருக்கும் அதிர்ச்சி ஏற்படுவது இயல்பு தான் என தெரிவித்துள்ளார். 

நிலைகுலையாமல் நெஞ்சுறுதியுடன் நிற்கும் திமுக எனும் பேரியக்கத்திற்கு இடைத்தேர்தல் சறுக்கல்கள் சாதாரணமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பணம் விளையாடிய இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட சரிவு குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், இடைத்தேர்தல் எனும் தற்காலிகத் தோல்வியை கடந்து 2 ஜி வழக்கின் நிரந்தர வெற்றியை கொண்டாடுமாறு தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com