\
ஆர்.கே.நகர் தேர்தல்: அரசியல் கட்சியினருடன் தேர்தல் அதிகாரி சந்திப்பு

ஆர்.கே.நகர் தேர்தல்: அரசியல் கட்சியினருடன் தேர்தல் அதிகாரி சந்திப்பு

ஆர்.கே.நகர் தேர்தல்: அரசியல் கட்சியினருடன் தேர்தல் அதிகாரி சந்திப்பு
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும், அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை தருவதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. பணப் பட்டுவாடா தொடர்பாக, 8 பேர் கைது செய்யப்பட்டு, 15 லட்ச ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனையில் அதிமுக சார்பில் தம்பிதுரை எம்.பி, அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பகுஜன் சமாஜ் கட்சி பிரதிநிதிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com