ஆர்.கே.நகர்: தேர்தல் அதிகாரிகள் நியமனம்

ஆர்.கே.நகர்: தேர்தல் அதிகாரிகள் நியமனம்

ஆர்.கே.நகர்: தேர்தல் அதிகாரிகள் நியமனம்
Published on

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக வேலுச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநராக உள்ளார். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக வட்டாட்சியர்கள் முருகேசன், சுப்பிரமணியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல உதவி அலுவலரான விஜயகுமார் வாக்காளர் பதிவு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com