விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக‌‌‌ நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. அப்போது விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் அலுவலகம் முன்பு விஷால் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமே இல்லை என்றும் தன்னை முன்மொழிந்த நபர்கள் அதிமுகவினரால் மிரட்டப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் கூறினார். இதனையடுத்து, மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் விஷால் வெளியிட்டார். இதனால் வேட்புமனு விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, இரவு 11 மணி அளவில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், விஷால் அளித்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் மனுவை முன்மொழிந்தோரில் சுமதி, தீபன் ஆகியோர் விண்ணப்பத்தில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை என நேரில் ஆஜராகி கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையான முன்மொழிவோர் இல்லாத காரணத்தால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி அறிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com