\
தொப்பி சின்னம் குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்: டெல்லி உயர்நீதிமன்றம்

தொப்பி சின்னம் குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்: டெல்லி உயர்நீதிமன்றம்

தொப்பி சின்னம் குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்: டெல்லி உயர்நீதிமன்றம்
Published on

டிடிவி தினகரன் தொப்பி சின்னம் கேட்டு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு வரும் டிச.21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி அத்தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. சசிகலா அணி தரப்பில் சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு முன்பே வழங்கியிருந்த தொப்பி சின்னத்தை வழங்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

இந்நிலையில் தொப்பி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரிய டிடிவி தினகரனின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்படுள்ளது. மேலும் தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com