மதுசூதனனுக்கு இரட்டை இலை: எதிர்ப்பு தெரிவித்த டிடிவி தரப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியை தேர்தல் மேற்கொண்டது. அப்போது அதிமுகவின் கட்சி விதிப்படி, படிவம் இரண்டின் ‘பி’ பிரிவில் பொதுச் செயலாளர் தான் கைழுத்திட வேண்டும் என டிடிவி தினகரன் விளக்கமளித்தனர்.
அத்துடன் வேட்புமனு படிவத்தில் பொதுச்செயலாளரின் கையொப்பத்திற்கு பதில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் கையொப்பம் இருப்பதால், மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது எனவும் தினகரன் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையே மதுசூதனனுக்கு இரட்டை இலைச்சின்னம் ஒதுக்கப்பட்டது. டிடிவி தினகரன் தொப்பிச்சின்னம் கோரிய நிலையில் அந்த சின்னம் ரமேஷ் என்ற வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது. அவர் கோரிய மற்ற சின்னங்களும் பிற வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தினகரன் தரப்பினர் வாதத்தில் ஈடுபட்டனர்.