பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் சட்டப்பேரவை குழு உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிகள் பராமரிப்பு, அவர்களுக்கான வசதிகள் குறித்த குழுவில் தோப்பு வெங்கடாசலம் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில், அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை நேற்று மாலையே தோப்புவெங்கடாசலம் ஆளுநரிடம் அளித்ததாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி சட்டமன்ற அவைக்குழு அமைக்கப்பட்டது. 18 பேர் கொண்ட இந்த குழுவின் தலைவராக ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளார். இந்த குழுவின் பதவிக்காலம் அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதிவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.