''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி
பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை இட ஒதுக்கீடுகள் ரத்தாகாது என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இடஒதுக்கீடுகள் ரத்தாகி விடும் என எதிர்க்கட்சிகள் வதந்தியை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். தாம் பிரதமராக இருக்கும் வரை, பின்தங்கிய மக்களுக்காக டாக்டர் அம்பேத்கர் ஏற்படுத்திய இடஒதுக்கீடுகளை யாராலும் ரத்து செய்ய முடியாது என உறுதிபட தெரிவித்தார்.
வடக்கு மகாராஷ்டிராவில் வசிக்கும் பழங்குடியினர்கள் பத்திரமாக வசிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். அத்துடன் 2014ஆம் ஆண்டு முதல் தங்கள் ஆட்சி நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவின் வளர்ச்சி உலக அளவில் இந்திய வளர்ச்சி உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.