கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி செல்லும் பாதையின் அடைப்பை சீர் செய்ய கோரிக்கை..

கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி செல்லும் பாதையின் அடைப்பை சீர் செய்ய கோரிக்கை..

கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி செல்லும் பாதையின் அடைப்பை சீர் செய்ய கோரிக்கை..
Published on

கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியின் ஆறுகண் மதகில், ஒருகண் வழியாக மட்டும் நீர் வெளியேறுவதாக புகார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் மற்றும் கரடிச்சோலை அருவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீரும், ஏரியில் இருந்து வெளியேறும் மழை நீரும் ஒன்றாக சேர்ந்து, வெள்ளி அருவியாக நகரின் முகப்பில் கொட்டுகிறது.

அருவியில் இருந்து வெளியேறும் நீர், ஆறுகண் மதகு வழியாக புலிச்சோலைக்குள் பாய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, ஆறுகண் மதகில் உள்ள ஐந்துகண் மதகுகளில் அடைப்பு ஏற்பட்டு, ஒருகண் மதகு வழியாக மட்டும் நீர் வெளியேறுவதாக புகார் எழுந்துள்ளது.

பெரு மழைக்காலங்களில் ஒருகண் வழியாக நீர் வெளியேறினால், பாலத்திற்கு நீர் அழுத்தம் ஏற்படும் என்றும், இதனை கவனத்தில் கொண்டு, கோட்ட நிர்வாகம், அடைப்பு ஏற்பட்டுள்ள ஐந்து கண்களிலும் அடைப்புகளை நீக்கி, சீரான நீர் வெளியேற்றத்தை உறுதி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கவனத்திற்கு கொண்டு சென்ற பொழுது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com