\
“பாலகிருஷ்ண ரெட்டி பெயரை உடனடியாக நீக்குங்கள்” - ஸ்டாலின் கோரிக்கை

“பாலகிருஷ்ண ரெட்டி பெயரை உடனடியாக நீக்குங்கள்” - ஸ்டாலின் கோரிக்கை

“பாலகிருஷ்ண ரெட்டி பெயரை உடனடியாக நீக்குங்கள்” - ஸ்டாலின் கோரிக்கை
Published on: 

தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பெயரினை உடனடியாக நிக்க வேண்டுமென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பால், தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, தனக்கு எதிரான தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தால் 'குற்றவாளி' என நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை  அறிவிக்கப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டியின் பெயரினை, தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், எம்.எல்.ஏக்களின் காலியிடங்களின் எண்ணிக்கையை 21 -ஆக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com