18 எம்.எல்.ஏக்கள் நீக்கம் தவிர்க்க இயலாதது: கிருஷ்ணசாமி

18 எம்.எல்.ஏக்கள் நீக்கம் தவிர்க்க இயலாதது: கிருஷ்ணசாமி

18 எம்.எல்.ஏக்கள் நீக்கம் தவிர்க்க இயலாதது: கிருஷ்ணசாமி
Published on

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கமும் தவிர்க்க இயலாதது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக தினகரன் அணி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி, வேறு எந்த கட்சியாக இருந்தாலும், எந்த மாநில சட்டப்பேரவையாக இருந்தாலும் சபாநாயகர் தனபால் எடுத்த முடிவை தான் எடுத்திருக்க முடியும் என்று கூறினார். கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து வரும் போது இதுபோன்ற நடவடிக்கையை தான் எடுத்தாக வேண்டும் என்று கூறிய அவர், 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தவிர்க்க இயலாதது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com