சட்டப்பேரவைக்குள் அனுமதி மறுப்பு: மயங்கி விழுந்த பாஜக எம்.எல்.ஏ

சட்டப்பேரவைக்குள் அனுமதி மறுப்பு: மயங்கி விழுந்த பாஜக எம்.எல்.ஏ
சட்டப்பேரவைக்குள் அனுமதி மறுப்பு: மயங்கி விழுந்த பாஜக எம்.எல்.ஏ

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மூன்று பாஜக நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவர் மயக்கமடைந்ததால், அவரை சிகிச்சைக்காக அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை இன்று தொடங்கிய நிலையில், மூன்று பாஜக நியமன எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க‌முடியாது என சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார். உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், தனது கருத்தை கேட்கவில்லை என சபாநாயகர் தெரிவித்திருந்தார். அதையடுத்து இன்று காலை சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 நியமன எம்.எல்.ஏக்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து அவர்கள் மூவரும் சட்டப்பேரவை வளாகத்தின் வெளியிலேயே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அதையடுத்து சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி ஆளுநர் உரை நிகழ்த்தினார். 

இதற்கிடையில் வாயிலில் உண்ணாவிரதமிருந்த எம்.எல்.ஏக்களில் சங்கர் என்பவர் மயக்கமடைந்ததையடுத்து, அவரை அரசுப் பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயர்நீதிமன்ற ஆணையை ஏற்க மறுத்து, சட்டப்பேரவைக்குள் செல்ல அனுமதிக்காததால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக நியமன எம்.எல்.ஏ சாமிநாதன் தெரிவித்தார். இந்நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு கொறடா தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com