டிரெண்டிங்
பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: தினகரனுக்கு வைத்திலிங்கம் சவால்!
பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: தினகரனுக்கு வைத்திலிங்கம் சவால்!
ஜெயலலிதா நினைவிடத்தில் நின்று ஆட்சியை கவிழ்ப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்தால், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்று வைத்திலிங்கம் எம்பி சவால் விடுத்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “திமுகவுடன் சேர்ந்து இந்த இயக்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று தினகரன் சொல்கிறார். அவர் ஜெயலலிதா சமாதியில் போய் இந்த ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லட்டும். நாளைக்கே சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க தயார். திமுகவுடன் சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்ப்பேன் என்று அண்ணா சமாதிக்கு சென்று சொல்ல தினகரன் தயாரா?” என்று கூறினார்.
மேலும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினால் கட்சியின் தலைவராகவோ, முதலமைச்சராகவோ ஆக முடியாது என்றும் வைத்திலிங்கம் கூறினார்.