உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார்: முதலமைச்சர் பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார்: முதலமைச்சர் பழனிசாமி
உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார்: முதலமைச்சர் பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ‌க அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, " உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கு முடிந்தால் தான் தேர்தலை நடத்த முடியும். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தேர்தலை நடத்த முடியாது. ஜெயலலிதா இருக்கின்ற போதே தேர்தல் நடத்தலாம் என்ற அறிவிப்பு வெளியான பின்பு, யார் சென்று நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் தான் ஜெயலலிதா அரசால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. ஆனால் ஜெயலலிதா அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக இருக்கிறது" என்றார்.

15 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2018 பிப்ரவரி வரை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது சாத்தியமில்லை என தமிழக அரசு இன்று பதிலளித்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ‌க அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com