\
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார்: சுஹாசினி

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார்: சுஹாசினி

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார்: சுஹாசினி
Published on: 

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் மட்டும்தான் அரசியலுக்கு வர வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் பேசும்போது, “ஜெயலலிதா ஆட்சிக்கு கீழ் குடிமக்களாய் இவ்வளவு நாள் இருந்துவிட்டு திரைப்படத் துறையில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வருவதில்லையா என கேட்பது மோசமான கேள்வி. கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? ஏன் ராதிகாவும், ரேவதியும், பூர்ணிமாவும், நதியாவும் கூட அரசியலுக்கு வரலாம். அது எல்லாம் மக்களின் கையில்தான் உள்ளது. ஜெயலலிதாவை நம்பி பெரிய பொறுப்பை கொடுத்ததுபோல், ராதிகா, ரேவதி, நதியா, சுஹாசினிக்கு பொறுப்பு கொடுங்கள். நாங்கள் எல்லோரும் அரசியலுக்கு வர ரெடியாகத் தான் இருக்கிறோம்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com