\
கமலுடன் பொது விவாதத்திற்குத் தயார்: இல.கணேசன்

கமலுடன் பொது விவாதத்திற்குத் தயார்: இல.கணேசன்

கமலுடன் பொது விவாதத்திற்குத் தயார்: இல.கணேசன்
Published on

இந்து தீவிரவாதம் என்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் உடன் பொது விவாதம் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் பிரபல தமிழ் வார இதழில் கமல் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என்று கூற முடியாது என சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார். இதற்கு சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட பாஜாகாவின் தேசிய தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இந்த கருத்திற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் எதிர்ப்புகள் வலுத்தன. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் மதுரையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது  கமல்ஹாசனுடன், இந்து தீவிரவாதம் என்ற வார்த்தை சரியா? தவறா? யார் உண்மையான தீவிரவாதிகள்? போன்ற கேள்விகளை முன்வைத்து, பொது விவாதத்தில் விவாதிக்க தாங்கள் தயார் என்று அவர் கூறினார். அதே போல் நடிகர் கமல் கூறிய இத்தகைய கருத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தான் ஒருபோதும் கூறவில்லை எனவும் இல.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com