”ஒருவேளை மிரர் எஃபெக்ட்டா இருக்குமோ?” - உலகின் weirdest t-shirt எது தெரியுமா?

”ஒருவேளை மிரர் எஃபெக்ட்டா இருக்குமோ?” - உலகின் weirdest t-shirt எது தெரியுமா?
”ஒருவேளை மிரர் எஃபெக்ட்டா இருக்குமோ?” - உலகின் weirdest t-shirt எது தெரியுமா?

ஆன்லைன் தளங்களில் துணிகளை வாங்குவதென்றால் ஒரு மாதிரியான கிலியையே பெரும்பாலும் கொடுக்கும். எப்போ வருமோ, எப்படி வருமோ என்ற ஒரு வகை பதட்டத்திலேயே வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். அதுவும் டெலிவரியான துணிகளில் குறைகள் இருந்து அதை ரிட்டர்ன் அனுப்பி மீண்டும் வருவதற்கும் போதும் போதுமென ஆகிவிடும்.

நேரில் சென்று கடைகளில் வாங்கினால் விலை கூடுதலாக இருக்கிறது என்பதால் ஆன்லைனில் குறைவான விலைக்கு துணிகளை வாங்கிவிட்டு, ஏன்தான் வாங்கினோமோ என ஃபீல் செய்யும் மன நிலைக்கே பெரும்பாலானோர் தள்ளப்படுகிறார்கள்.

அப்படியான ஒரு சம்பவத்தை ஆன்லைன் நிறுவனம் ஒன்று அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக்கப் ப்ரோகன் என்ற வாடிக்கையாளருக்கு செய்திருக்கிறது. இதனை மிகவும் வருத்தத்துடனும் வேதனையுடனும் அந்த ஜேக்கப் ட்விட்டர் பக்கத்தில் ஃபோட்டோக்களோடு பதிவிட்டுள்ளது வைரலாகியிருக்கிறது.

அதில், அரை கை அளவுள்ள டார்க் கிரே நிறத்திலான டி-ஷர்ட்டை ஜேக்கப் ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு வந்ததோ ஒரு கையில் ஃபுல் ஸ்லீவும், மறு கையில் ஹாஃப் ஸ்லீவும் கொண்ட வித்தியாசமான வடிவில் உள்ள டி-ஷர்ட். இதனை கண்டதும் ஆச்சர்யத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளான ஜேக்கப், குழம்பிப் போய் ட்விட்டரில் பொறுமித் தள்ளியிருக்கிறார்.

அதன்படி, “இது ஷார்ட் ஸ்லீவ் டி-ஷர்ட்டாகதான் இருக்கிறது என அழுத்தமாக கூற நினைக்கிறேன். ஆனால் இப்படி ஒரு டிசைனில் இதுவரை நான் பார்த்ததே இல்லை. இந்த டி-ஷர்ட் தயாரிக்கப்பட்ட கார்மென்ட்ஸில் ஷார்ட் மற்றும் ஃபுல் ஸ்லீவை தூக்கி எறியும் போது இதுப் போன்ற டிசைனில் தைத்திருப்பார்கள் போல என நினைக்கிறேன்.” என்று ஜேக்கப் ப்ரோகன் ட்வீட்டியிருக்கிறார்.

ஜேக்கப்பின் இந்த ட்விட்டர் பதிவைக் கண்ட நெட்டிசன்கள், இதுதான் உலகின் வித்தியாசமான டி-ஷர்ட்டாக இருக்கும் என்று World's weirdest tee எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com