SRH vs RCB :  டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் ஃபீல்டிங் தேர்வு!

SRH vs RCB : டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் ஃபீல்டிங் தேர்வு!

SRH vs RCB : டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் ஃபீல்டிங் தேர்வு!
Published on

சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நடப்பு ஐபிஎல் சீசனின் ஆறாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடுகின்றன. இந்த ஆட்டதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். கடந்த போட்டியில் அந்த அணி கொல்கத்தாவிற்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது. 

பெங்களூர் அணி முதலில் பேட் செய்கிறது. மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் மாதிரியான வீரர்கள் அந்த அணிக்கு பலம். கடந்த போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையோடு களம் இறங்குகிறது.

ஐதராபாத் அணியில் இளம் வீரர் அப்துல் சமாத் பேட்டிங் ஆர்டரில் முன்கூட்டியே களம் இறங்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கின்றனர் அந்த அணியின் ரசிகர்கள். 

ஐபிஎல் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 10 போட்டிகளிலும் பெங்களூரு அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு கிடைக்காமல் போயுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com