'அஸ்வினுக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வு ' – ஸ்ரேயஸ் ஐயர்

'அஸ்வினுக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வு ' – ஸ்ரேயஸ் ஐயர்
'அஸ்வினுக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வு '  – ஸ்ரேயஸ் ஐயர்

அஸ்வினுக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்படும் என டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு ஓவர் மட்டும் வீசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர் ரவிச்சந்திர அஸ்வின், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனினும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஃபீல்டிங் செய்ய முயன்றபோது கீழே விழுந்தார். இதனால் அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். பிறகு அவர் மீண்டும் விளையாட வரவில்லை.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் காயமடைந்த ரவிச்சந்திர அஸ்வினுக்கு பதிலாக அமித் மிஸ்ரா இடம்பெற்றார்.

இந்த போட்டிக்கான டாஸின் போது அஸ்வின் குறித்து பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், ‘’அஸ்வின் முழு உடற்தகுதியுடன் உள்ளார். ஆனால் அஸ்வினுக்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். ஜிம்மில் அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com