சர்ச்சைக்குள்ளான கேட்ச்...! அம்பயரிடம் டென்ஷன் ஆன கே.எல்.ராகுல்!
கிங்ஸ் லெவன் பஞ்சாப்க்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவின் கெயிக்வார்ட் அதிரடியாக அரைசதம் கடந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
இதில் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 153 ரன்கள் குவித்தது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூபிளசிஸும் கெயிக்வார்டும் களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது.
இதனிடையே 7வது ஓவரை பிஸ்னொய் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை கெயிக்வார்ட் எதிர்கொண்டார். அப்போது அந்த பந்து அவுட்சைடு எட்ஜாகி மந்தீப்சிங்கின் கையில் கேட்ச் கொடுத்தார் கெயிக்வார்ட். ஆனால் கெயிக்வார்ட் வெளியில் செல்லவில்லை. இதனால் ரிவீயூ கேட்கப்பட்டது. அப்போது பந்தை பிடித்து மந்தீப்சிங் கீழே விழுந்தார். அதில் பந்தை அவர் கீழே வைத்தது போன்று காண்பிக்கிறது. ஆனால் மூன்றாவது நடுவரே அந்த விக்கெட்டில் குழப்பமடைந்து நாட் அவுட் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கெயிக்வார்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து கடைசிவரை களத்தில் நின்றார்.
முன்னதாக, மூன்றாவது நடுவர் நாட் அவுட் என கொடுத்தது டென்ஷன் ஆன கே.எல்.ராகுல் களத்தில் இருந்த நடுவரிடம் முறையிட்டார். ஆனால், ராகுலை சாந்தப்படுத்தி நடுவர் அனுப்பி வைத்தார். அதேபோல், மைதானத்திற்கு வெளியே ஸ்டேடியத்தில் இருந்த அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ளேவும் நாட் அவுட் என வந்ததால் கோபமடைந்தார். அவரது விரல் பந்திற்கு அடியில் இருந்தது என்பது போல் அவர் சைகை செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.