அத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து : அமைச்சர் ஜெயக்குமார்

அத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து : அமைச்சர் ஜெயக்குமார்

அத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து : அமைச்சர் ஜெயக்குமார்
Published on

பாஜக -அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொருத்தவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முரணான கருத்துக்களை அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை கூறி வருகிறார்.

இந்த சூழலில் மகாராஷ்டிரா மாநில இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த போது,மக்களவை தேர்தல் வியூகங்கள் பற்றி பேசினார். அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைந்து அதிமுகவுடன் தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்காக தினகரனை சந்தித்து வலியுறத்த உள்தாக அத்வாலே தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக-அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராம்தஸ் அத்வாலே பேசியிருப்பது குறித்து பாஜக தலைமைதான் தெளிவுப்ப‌டுத்த வேண்டும் என ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் ராம்தாஸ் அத்வாலே பாஜகவைச் சேர்ந்தவரே அல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com