”சீதையாக நடித்த நீங்களே இப்படி செய்வதா?” -ராமாயன் சீரியல் நடிகையை ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்

”சீதையாக நடித்த நீங்களே இப்படி செய்வதா?” -ராமாயன் சீரியல் நடிகையை ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்
”சீதையாக நடித்த நீங்களே இப்படி செய்வதா?” -ராமாயன் சீரியல் நடிகையை ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்

தூர்தர்ஷன் சேனலில் 1987ல் ஒளிபரப்பான ராமயன் சீரியலில் சீதையாக நடித்த தீபிகா சிக்ஹிலா இந்தி ரசிகர்கள் பெருமளவில் ரசிக்கப்பட்டவர். தற்போது திரையில் அவ்வளவாக தோன்றவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் தொடர்ந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டே வருகிறார் தீபிகா.

அந்த வகையில் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தீபிகா டிரான்சிஷன் வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார். பெரும்பாலான அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து வியந்து கமெண்ட் செய்திருந்தனர்.

இருப்பினும் சில இணையவாசிகள் ராமாயன் சீரியலில் சீதையாக நடித்துவிட்டு இப்படியெல்லாம் வீடியோ போடுவதா என்ற பாணியில் காட்டமாக விமர்சித்திருக்கிறார்கள். அதில், “இது உங்களுக்கு பொருத்தமாக இல்லை” , “ஒவ்வொரு வீட்டிலும் சீதையாகவே பார்க்கப்படுகிறீர்கள். இப்படி இருக்கையில், ஏன் இது மாதிரியெல்லாம் செய்கிறீர்கள்”, “சீதாவாக நடித்த உங்களுக்கு இது நன்றாக இல்லை” என பலரும் தீபிகாவின் உடையையும் அவரது பதிவையும் விமர்சித்து கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

இதே போன்று பல முறை தீபிகாவின் பதிவுகளை விமர்சித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஏனெனில் 1987ம் ஆண்டு ராமாயன் சீரியல் ஒளிபரப்பாகியிருந்தாலும் இன்றளவும் பலருக்கும் நெருக்கமான தொடராக இருப்பதோடு, சீதாவாக நடித்த தீபிகாவையும், ராமராக நடித்த அருண் கொவிலையுமே ராமர் சீதையாக ரசிகர்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும் புராண கதைகளில் நடித்ததற்காக நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் அப்படியே வாழ்ந்தாக வேண்டும் என நிர்பந்திப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் தீபிகாவுக்கு ஆதரவாகவும் சிலர் இணையத்தில் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com