ஞானவேல்ராஜா கூறியது பொய் - ராஜ்கமல் பிலிம்ஸ்

ஞானவேல்ராஜா கூறியது பொய் - ராஜ்கமல் பிலிம்ஸ்
ஞானவேல்ராஜா கூறியது பொய் - ராஜ்கமல் பிலிம்ஸ்

கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி தந்ததாக ஞானவேல்ராஜா கூறியது பொய் என ராஜ்கமல் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது

‘உத்தம வில்லன்’ பட வெளியீட்டின் போது, தன்னிடம் வாங்கிய பணத்தை நடிகர் கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்து இருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரில், ரூ10 கோடி கொடுத்தால் படம் தயாரிக்க கால்ஷீட் தரப்படும் என கமல் கூறியதாக ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி தந்ததாக ஞானவேல்ராஜா கூறியது பொய் என ராஜ்கமல் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் 
கமலுக்கு ரூ.10 கோடி கொடுத்ததற்கான ஆவணங்களை ஞானவேல்ராஜா உடனே சமர்ப்பிக்க வேண்டும்; இல்லையென்றால் புகாரை திரும்பப்பெற வேண்டும். ஆதாரத்தை தர தவறும்பட்சத்தில் ஞானவேல்ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com