வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!
Published on

தான் 25 வருடமாக ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து வருவதாகவும், இது வழக்கமான ஒரு சந்திப்புதான் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், இன்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச்செல்கிறார். அங்கு 2 வார காலம் தங்கியிருக்கும் ரஜினி, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் களத்தில் இறங்கப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்கா செல்வது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இன்று துக்ளக் வார இதழின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு ஒருமணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இதுதொடர்பாக தற்போது தனது இல்லத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த், “நானும், ஆடிட்டர் குருமூர்த்தியும் 25 வருடங்களாக சந்திக்கிறோம். இது வழக்கமான ஒரு சந்திப்பு தான். சீருடையில் இருக்கும் காவலரை தாக்கியது கண்டிக்கத்தக்கது. சீருடையில் இருக்கும் காவலர் மீது கை வைப்பது மன்னிக்க முடியாத குற்றம். நிர்மலா தேவி விவகாரத்தில், விசாரணைக்குப்பின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடும் தண்டனை விதிக்க வேண்டும். கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தெரிந்து செய்தாலே, தெரியாமல் செய்தாலே எஸ்.வி. சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து முகநூலில் பதிவிட்டது, மன்னிக்க முடியாத குற்றம்’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com