வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ரஜினி..!

வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ரஜினி..!
வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ரஜினி..!

அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை இன்று நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வந்தார். இந்தச் சந்திப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றார். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார். நீண்ட காலமாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா..? மாட்டாரா..? என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அரசியலுக்கு வரஉள்ளதாக ரஜினி அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது ரசிகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் கூடிய ரசிகர்களுக்கு அவர் வாழ்த்துக் கூறினார். வீட்டில் இருந்து வீதிக்கு வந்து, அங்கு கூடியிருந்தவர்களுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். ரஜினிகாந்த் தனது ரசிகர்களை பார்த்து கையெடுத்து வணங்கியபடி புத்தாண்டு வாழ்த்து கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com