“காலில் விழாதீர்கள்”: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

“காலில் விழாதீர்கள்”: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்
“காலில் விழாதீர்கள்”: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

புகைப்படம் எடுக்க வரும்போது காலில் விழ வேண்டாம் என ரசிகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினி. அப்போது பேசிய அவர், அரசியலுக்கு வருவது குறித்த சர்ச்சைகளுக்கு போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும், தமிழகத்தில் தலைவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சிஸ்டம் சரியில்லை என்று பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே இரண்டாம் கட்டமாக ரஜினிகாந்த், தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் (டிசம்பர் 26) சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தொடங்கியது. வருகிற 31 ஆம் தேதி வரை, ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். இன்று மூன்றாவது நாளான ரஜினி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினி, “கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் இருக்கும் உங்கள் முகத்தை பார்க்கும்போது எனக்கு உற்சாகமாக உள்ளது. 1976-ல் மதுரைக்கு முதல் தடவை சென்றிருந்தேன். மீனாட்சியம்மன் கோவிலில் அர்ச்சகர் என்ன நட்சத்திரம் என கேட்டார். ஆனால் எனக்கோ நட்சத்திரம், கோத்திரம் தெரியாது. பின்னர் பெருமாள் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்தார்கள். அதன்பின் தெரிந்தது எனது நட்சத்திரம் கூட பெருமாள் நட்சத்திரம்தான் என்று. மதுரை என்றாலே வீரம்தான். மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ளீர்கள். உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால் ராகவேந்திரா திருமண மண்டபம் சைவம் என்பதால் வேறு ஒரு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன். பார்க்கும்போது உங்களின் உற்சாகம் மற்றும் உணர்ச்சியை புரிய முடிகிறது. ஏனென்றால் நானும் உங்களைப்போல சினிமா ரசிகனாக இருந்து எல்லாவற்றையும் தாண்டி வந்தவன்தான். சிறுவயதில் பெங்களூருவில் இருக்கும்போது ராஜ்குமாரின் பெரிய ரசிகன் நான். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் இரண்டுபேரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் அப்படி அவர். நானும் சென்று அவரை டச் பண்ணிருக்கேன். ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். பெற்றோர் மற்றும் பெரியவர்கள் காலில் மட்டும் விழுங்கள்” என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com