\
‘ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு’ ரஜினியின் புதிய விளக்கம்!

‘ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு’ ரஜினியின் புதிய விளக்கம்!

‘ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு’ ரஜினியின் புதிய விளக்கம்!
Published on

தலைசுத்திருச்சு என்று கூறியதற்கு நடிகர் ரஜினிகாந்த் புதிய விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பேசிய அவர், “ஒரு சின்ன விஷயம் அதற்கு ஒரு பெரிய விவாதம். கொள்கை கேட்டால் தலைசுத்திருச்சுனு கூறினேன்.

டிசம்பர் 31ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவதா? இல்லையா? என்று கூறினேன். 29ஆம் தேதி உனது கொள்கை என்ன? கேட்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், கல்யாணத்துக்கு பெண் பார்க்கப்போகிறவனிடம் சென்று எனக்கு இன்னும் திருமண அழைப்பிதழ் வரவில்லை என்று கேட்பது போல் உள்ளது. அந்த மாதிரி ஒரு சின்னப்பையன், செய்தியாளர் கேட்கிறார் என்று எனக்கு தலைசுத்திருச்சு என்று கூறினார். ஆனால் பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் மேடையில் இதை கிண்டல் செய்து பேசுகிறார்கள்” என்று கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com