நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தின் பெயரை மக்கள் மன்றமாக மாற்றி அறிவித்து இருக்கிறார்.
அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்ததை அடுத்து, தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும்படி ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். புதிய ரசிகர்கள் பதிவு செய்வதற்கு வசதியாக அதற்காக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கி இருந்தார்.
இந்த நிலையில், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரை, ரஜினி மக்கள் மன்றம் என மாற்றி அறிவித்துள்ளார்.