\
ரஜினி மன்றத்தில் 3 லட்சம் பேர் இணைந்தனர்

ரஜினி மன்றத்தில் 3 லட்சம் பேர் இணைந்தனர்

ரஜினி மன்றத்தில் 3 லட்சம் பேர் இணைந்தனர்
Published on: 

ரஜினி மன்றத்தில் 3 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னோட்டமாக, தனது ரசிகர்களை ரஜினி மன்றம் டாட் ஓஆர்ஜி (rajinimandram.org)  என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 3 லட்சம் பேர் இணையதளத்தின் மூலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 50,000 பதிவு செய்யப்படாத ரஜினி ரசிகர் மன்றங்கள் இருப்பதாகவும், அவர்களை இணைக்கும் தளமாக rajinimandram.org இணையதளம் இருக்கும் என்று தெரிகிறது. ஆண்ட்ராய்டு ஆப் மூலமும் ரசிகர்களை இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமல்லாமல் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வெப்சைட்டை பயன்படுத்தியுள்ளதாகவும், ரஜினி வெளியிட்ட வீடியோ செய்தியை பார்த்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நடிகர் ரஜினி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “உண்மை, உழைப்பு, உயர்வு என்ற தாரக மந்திரத்தின் மூலம் தமிழ்நாட்டில் நல்லாட்சியை நடத்துவோம். பதிவு செய்யாத ரஜினி ரசிகர்களுக்காகவும், ரசிகர் மன்றங்களை இணைக்கவும், தமிழக மக்களை ஒருங்கிணைக்கவும் rajinimandram.org என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளேன். இதன் மூலம் நீங்கள் ஒரு உறுப்பினராக இணைத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த ஒன்றுபட்டு உழைப்போம். வாழ்க தமிழக மக்கள்!” என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com