\
“ஒரு விஷயத்தில் எனக்கு மிகுந்த ஏமாற்றமே” : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

“ஒரு விஷயத்தில் எனக்கு மிகுந்த ஏமாற்றமே” : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

“ஒரு விஷயத்தில் எனக்கு மிகுந்த ஏமாற்றமே” : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
Published on

மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பில் ஒரு விஷயத்தில் தனக்கு மிகுந்த ஏமாற்றமே என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகேவேந்திரா மண்டபத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். சுமார் ஒருமணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கட்சி அறிவிப்பு தேதி குறித்து ஆலோசித்தேன். நிறைய கேள்விகள் அவர்களிடம் இருந்தன. அதற்கு பதில் அளித்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக் கொண்டோம். அவர்களுக்கு மிக திருப்திகரமாக இருந்தது.

ஆனால் எனக்கு ஒருவிஷயத்தில் திருப்தி கிடையாது. ஏமாற்றம் தான். அதை இப்போது சொல்ல விரும்பவில்லை. உள்ளே பேசியதை வெளியே சொல்ல முடியாது. நேரம் வரும்போது சொல்வேன்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com